This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.அறிவோம் அறிஞர்களை எனும் இந்த நிகழ்ச்சி உலக அறிஞர்கள் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திருமிகு மேகலா இராமமூர்த்தி. 1876ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள், நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள காடம்பாடியில் சொக்கநாதப் பிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் மகனாய்ப் பிறந்தார் மறைமலை அடிகள். செய்யுள், புதினம், நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி எனப் பல் துறைகளிலும் அளவற்ற நூல்களை அடிகளார் படைத்துள்ளார். 1916ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தமையால் ’தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்ற பெருமையைப் பெற்றார்.
அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம் ஆங்கிலம் மற்றும் வடமொழிபால் அவர்கொண்ட வெறுப்பால் தோன்றிய இயக்கமன்று; தமிழ்மீது அவர்கொண்ட தணியாத காதலால் மலர்ந்த இயக்கமாகும்.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more