இந்திய ஆட்சிப்பணியில் முத்திரை பதித்தவர், கல்வெட்டியல் அறிஞர், தினமணி நாளேட்டின் ஆசிரியர், வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகங்கள் கொண்ட பேரறிஞர் ஐராவதம் மகாதேவன். தமிழின் தொன்மையைத் தமது கடும் உழைப்பாலும், காய்தல் உவத்தலற்ற நடுநிலையான ஆய்வுத் திறத்தாலும் உலக அரங்குக்கு எடுத்துச்சென்றவர். 1977-இல் அவர் வெளியிட்ட ‘The Indus Script: Texts, Concordance and Tables என்ற நூல் சிந்து சமவெளி எழுத்துக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. அந்நூலில்தான் சிந்துவெளி நாகரிகமானது ஆரியக் கலப்பில்லாத அதற்கு முற்பட்ட திராவிட நாகரிகம் என்பதை அவர் நிறுவினார்.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more