ATR Arivom Arignarkalai - Dr. Mu. Varadarasanar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida. கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர்களாகப் பணியாற்றிச் சென்றிருப்போர் எத்தனையோ பேர். அவர்கள் அனைவரையும் அவர்களுடைய மாணவர்கள் நினைவில் வைத்துப் போற்றுகின்றார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களில் மிகச் சிலரையே மாணவருலகம் என்றும் நன்றியோடு போற்றுகின்றது; நினைந்து மகிழ்கின்றது; அத்தகையோரில் ஒருவர்தாம் மு.வ. என்றழைக்கப்படும் மு.வரதராசனார்.
நாவல் நாடகம் சிறுகதை போன்ற துறைகளிலும் முத்திரை பதித்தவர் மு.வ. அவர் எழுதிய நாவல்கள் மொத்தம் 13. அவற்றில், காதலின் பல்வேறு கோணங்களைச் சித்திரித்தது செந்தாமரை; தாய்மையின் மகத்துவத்தைப் புலப்படுத்தியது பெற்ற மனம்; பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களை வடித்துக்காட்டியது கள்ளோ காவியமோ; கலைமனத்தின் உணர்வுகளை உணர்த்தியது கரித்துண்டு; உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே கிடந்து அல்லலுறும் இளைஞர்களின் போக்கை வெளிச்சமிட்டது அகல்விளக்கு; அரசு அலுவலங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தோலுரித்துக் காட்டியது கயமை. மலர்விழி, அல்லி, நெஞ்சில் ஒரு முள் போன்றவை குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை விவரித்தன.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more