Tamil Today-Magudeswaan, Megala:தற்காலத்தமிழ்:கவிஞர் மகுடேசுவரன்:மேகலா இராமமூர்த்தி. தற்காலத்தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் மகுடேசுவரன் அவர்கள் ஆற்றிய உரை. உடன் உரையாடுவார் புளோரிடா மாநிலத்திலிருந்து திருமிகு மேகலா இராமமூர்த்தி.
நாள் / நேரம்:
மே 7, வியாழக்கிழமை இரவு 6:00மணி (பசிபிக் நேரம்)
மே 8, வெள்ளிக்கிழமை காலை 6:30மணி (இந்திய நேரம்)
தலைப்பு: தற்காலத்தமிழ்
நேர்காணல்:திருமிகு மேகலா இராமமூர்த்தி.
கவிஞர் மகுடேசுவரன் அவர்களைப்பற்றி -
தமிழ்ப்பணிகள் :
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இலக்கண அறிஞர், மொழி ஆய்வாளர், குறள் உரைஞர், திரைப்படப்பாடலாசிரியர் மற்றும் உரையாடல் ஆசிரியர்.
எழுதிய நூல்கள் :
கவிதைத் தொகுப்புகள் :
1. பூக்கள் பற்றிய தகவல்கள் (1996)
2. அண்மை (1997)
3. யாரோ ஒருத்தியின் நடனம் (2001)
4. காமக்கடும்புனல் (2004)
5. குமரன் காவியம் (2005)
6. மண்ணே மலர்ந்து மணக்கிறது (2006)
7. இன்னும் தொலையாத தனிமை (2007)
8. காந்தி அண்ணல் (2005)
9. எழில்நலம் (2012)
10. நிறைசூலி (2013)
11. வினைநிரல் (2014)
12. புலிப்பறழ் (2016)
13. ஒன்றாய்க் கலந்த உலகு. (2017)
14. முதல் மழைக்கே செழித்த பைங்கூழ் (2019)
திரைப்பட ஆய்வு நூல்கள் :
1. பாட்டுத்திறம் (2011)
2. நம்மை மகிழ்வித்த கலைஞர்கள் (2019)
3. திரையில் ஒளிர்ந்த கதைகள் (2019)
4. திரையிசைத் தென்றல் (2019)
5. இன்றே இப்படம் கடைசி (2019)
6. திரைக்கு வெளியே (2019)
கட்டுரைத் தொகுப்புகள் :
1. தன்வெறியாடல் (2013)
2. களிநயம் (2015)
3. விலைகள் தாழ்வதில்லை (2016)
4. காலதர் (2018)
5. நீர்கொணர்ந்த நெடுங்கோன் (2018)
6. நிகழ்பாடு (2019)
7. தமிழ்ப்பறழ் (2019)
உரைநூல் :
திருக்குறள் உரை (2015)
மொழிநூல்கள் :
1. மொழித்திறம் (தமிழ் இலக்கண விளக்கங்கள். புதிய தலைமுறை இதழில் தமிழே நலமா ? என்ற பெயரில் தொடராக வெளிவந்த இலக்கணக் கட்டுரைகளின் தொகுப்பு)
2. அருஞ்சொற்பொருள் (தமிழ் இலக்கணக் கட்டுரைகள், மொழிவளக்குறிப்புகள் அடங்கிய தொகுப்பு)
3. மொழிப்படிக்கட்டு
4. சொல் என்னும் உயிர்விதை
5. இலக்கணத் தொடக்கம்
6. பிழையில்லாத எழுத்து
7. வலிமிகுதல்
8. வடசொல் அறிவோம்
வரலாற்றுக் கட்டுரைகள் தொகுப்பு நூல்
1. கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம் - ஹம்பியைப் பற்றிய முழுமையான நூல்.
(ஆனந்த விகடன் வெளியீடு)
திரைப்படப் பங்களிப்பு :
நஞ்சுபுரம் என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா.
வெளிவந்துள்ள பல படங்களின் திரைக்கதை ஆலோசகர்.
வெளிவரவுள்ள சில திரைப்படங்களில் திரைக்கதைப் பங்களிப்பு.
காட்சி ஊடகப் பங்களிப்பு :
1. நீயா நானா’ நிகழ்ச்சியில் இருபதுக்கும் மேற்பட்ட முறை சிறப்பு விருந்தினர்.
2. சன் தொலைக்காட்சி சூரிய வணக்கத்தில் சிறப்பு நேர்காணல்
3. பல்வேறு தொலைக்காட்சிகள், காணொளித் தளங்களில் பங்கேற்றுப் பேசியுள்ளமை
4. அண்ணா நூற்றாண்டு நூலக மேடையில் தற்காலத் தமிழ் இலக்கணம் என்ற தலைப்பில் பேருரை ஆற்றியமை.
5. அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற தமிழ் அறக்கட்டளை - சிகாகோத் தமிழ்ச்சங்கம் நடத்திய மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிமை.
இதழியல் எழுத்துப் பணிகள் :
கணையாழி, சுபமங்களா, புதியபார்வை, நிகழ், கனவு, இலக்கு, விருட்சம், உயிர்மை முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிடல். ஆனந்த விகடன், குமுதம், தி இந்து, தினமலர், புதிய தலைமுறை, விகடன் தடம், சக்தி விகடன், கோகுலம் கதிர் முதலான முன்னணித் தமிழ் இதழ்கள் பலவற்றிலும் கவிதைகள், கட்டுரைகள், தொடர்கள் எழுதியுள்ளமை. முன்னணித் தமிழ் இதழ்கள் அனைத்திலும் படைப்புகள் வெளியாகியுள்ளமை.
முகநூலில் தொடர்ந்து கவிதை இலக்கணம் சமூகம் சார்ந்து எழுதுவது. உலகெங்குமுள்ள தமிழர்கள் விரும்பும் இணையத்தமிழ் ஆசிரியர்.
பெற்றுள்ள விருதுகள் :
ஆனந்த விகடன் பவளவிழா விருது,
பாரத ஸ்டேட்வங்கி விருது - இருமுறை,
கலை இலக்கியப் பெருமன்ற விருது.
திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது.
ஈரோடு தமிழன்பன் வாழ்நாள் சாதனையாளர் விருது
கவிஞர் சிற்பி இலக்கிய விருது
திருப்பூர்ப் புத்தகக் கண்காட்சிப் படைப்பாளர் விருது
ஏற்றிருந்த பொறுப்புகள் :
தமிழ்நாட்டரசின் புதிய பாடத்திட்ட உயர்மட்டத் துணைக்குழு உறுப்பினராக இருந்தமை.
சாகித்ய அகாதமி நடுவர் குழுவில் பணியாற்றியமை.
பல்வேறு அமைப்புகளின் கவிதைப்போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியமை.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more