அலையில்லா கடல்போல்
அன்பில்லா மனம்போல்
நிலவில்லா வானம்போல்-இந்த
தூரிகையில்லா சித்திரமும்
துணிந்து பேசுகின்றது.
கற்பனை யில்லாதகனவுகள்
கண்முன்னே கணப்பொழுதில்
தோன்றி மறைக்கின்றன-அந்த
கற்பனைக் கனவிலும்ஒரு
கானகமே விரிகின்றது.
கானகத்தின் ஜீவன்களும்
கண்ணீரையே உறிஞ்சுகின்றன-காரணம்
தண்ணீருக்கு அங்குபஞ்சம்!
மலைமீதினின்றும் வீழும்அருவியில்
மூலிகைகள் பலகலந்துள்ளன.
மனிதவிழிகளினின்றும் விழும்
விழிநீர் அருவியில்
மூலக்கதைகள்பல பளிச்சிடுகின்றன.
சித்திரம் வரையஆசைதான்-ஆனால்
யார்தூரிகை வாங்கித்தருவார்?
கள்வனைக் காணவும்ஆசைதான்-ஆனால்
கண்டுபிடிக்க காவலர்எவர் வருவர்?
உண்மையையே பேசஆசைதான்-ஆனால்
எனக்குபதில் யார்உதைவாங்குவது?
Create your
podcast in
minutes
It is Free