நல்ல சொற்கூட்டி அவர்கள்
நா பாட நின்றபோது
நல்ல கவிஞனை காலன்
நல்லழைப்பு விடுத் தழைத்தான்.
உள்ளங் கலங்கும் மக்களை
உவகையோடு கண்ட காலன்
கோடானு கோடிமக்களின் கண்களிட்ட
கோலநீரைக் கண்டுங் காணாது
கடமை ஒன்றையேக் கருதி
கழுவேற்றினான் கவி யரசனை!
கலங்கிய மக்கள் குலம்கதறிய
கதறல்….காலனே! காலனே!
ஏன் அழைத்தாய் எதற்கழைத்தாய்
எங்கள் கவிக்குயிலை?
இரக்கமற்ற இந்தக்காலனை எந்த
காலன் என்று அணுகுவானோ?
Create your
podcast in
minutes
It is Free