நான் அரசியாகிலும்
நான் வளர்த்த
அன்னப்பறவை மீரா,
மீளாஇறப்பிற்கு சென்று
விட்டதாலொரு கலக்கம்!
அன்னப்பறவையே,
நாடுபுரக்கும் நல்லோனின்
முகம்போல முழுநிலா ஒளிவிடும்
இம்மாலைக் காலத்தில்
யான் உன்னை நினைந்து
உன்னில் தவழ்ந்துவிளையாடி
உன்னை நீராய்கவழ்கின்றேன்!
குமரியாற்றினது அழகிய
பெரிய துறைக் கண்ணே!
அயிரை மீன்போன்ற என்னுயிரே!
அன்பின் சின்னமே நீ
அருளின் புனித நீரோ?
மலையமான் போன்று
உன்இறப்பு என்நீர்மை
நட்பாங் கிழமைதரும்
நன்னாட்களை ஓடவிடுகிறது.
அன்புணர்ச்சி உன்னுடையதா?
விசுவாசம் உன்னில்,
நட்பின் ஆழம் உன்னி்ல்,
அன்பின் ஆழம் உன்னில்
தெற்றெனப் புலப்படுவதைக்
கண்டேன்; களிப்புற்றேன்!
பேடைக்கு இன்புறும்தன்
அன்பின் சின்னமாகநீ,
மடந்தை என்னுடனிருந்தால்
உன் பாதுகாப்புஎன்னில்
உவகை நீரைபுலப்படுத்தும்- நீ
உயிரறுத்தபோது
கண்ணில் நீர்சரிகிறது - நீ
உன் குவளைக்கண்ணில்
சிந்தியதுநீரா? இல்லை இல்லை
Create your
podcast in
minutes
It is Free