13. ஒரு விந்தையான வேண்டுகோள் | Strange Request
ஓ ………… என் தெய்வமே!
பாவை உன்னிடம் வேண்டுகிறேன்!
பாவங்கள் நிறையநான்
புரிந்திடல் வேண்டும்,
பாவங்களினால் பாதிக்கப்
பட்டால்தான் என்னால்
புண்ணியங்கள் பல
புரிந்திட முடியும்!
ஓ ………… என் தெய்வமே!
ஆருயிர்களின் வெறுப்புகளுக்கும்நான்
ஆளாகித்தவிக்க வேண்டுகிறேன்!
பிறரின் வெறுப்பினால்நான்
பாதிக்கப் பட்டால்தான்
அனைவரையும் முழுமையாக
அன்புசெய்ய என்னாலாகும்!
ஓ ………… என் தெய்வமே!
தண்டனைக்குள்ளாகி நான்நாள்தோறும்
தவிக்கும்நிலையை தான்வேண்டுகிறேன்!
அதிகம் தண்டிக்கப்பட்டால்தான்
அனைவரையும் எளிதில்
மன்னித்து ஆதரிக்கும்
மனப்பக்குவம் எனக்குகிட்டும்!
ஓ ……….. என் தெய்வமே!
தொல்லைகள் நிறையஎனைத்
தொடர நான்வேண்டுகின்றேன்!
பிரச்சனைகள் பலபின்பற்றினால்
பின்அவற்றை எதிர்கொள்ளும்
பொறுமையும் தானாகஎன்
பொன்மனதில் வளர்ந்துவிடும்!
Create your
podcast in
minutes
It is Free