17 ஆகஸ்ட் 2021
பிலிப்பியர் 1: 27-30
வேற்றுமையிலிருந்து ஒத்துப்போதல்
கிறிஸ்தவர் மத்தியில் ஒற்றுமை, அன்பு, தோழமை
இருக்கும்பொழுது கர்த்தர் அந்த திருச்சபையை குறித்து
மகிழ்ச்சியடைகிறார். இது பெரியது சிரியது என்ற திருச்சபையின்
அளவைப் பொருட்படுத்தாமல் நடக்கிறது.
உற்சாகம், ஆறுதல், தோழமை, மென்மையாய் இருத்தல், இரக்கம்
போன்ற பண்புகள் எங்கு காணப்படுகிறதோ அங்கு நாம் இயேசு
கிறிஸ்துவுடன் ஆவியில் ஒருமைப்படுகிறோம்.
மற்றவர்களை நாம் எவ்வாறு நடத்திகிறோம் என்பது நாம் கர்த்தரால்
எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதின் அளவாகும்.
நமீதுள்ள கர்த்தரின் அன்பை நாம் அதிகமாக புரிந்துகொள்ளும்போது
நாம் பிறருக்கு அதிகமான அன்பை காண்பிப்போம்.
கர்த்தரை மகிழ்விக்கும் தேவாலயத்தில், ஆவியிலே ஒற்றுமை,
ஒருமைப்பாடு மற்றும் இணக்கம் காணப்பட வேண்டும். இது
சுவிசேஷத்தையும் இயேசு கிறிஸ்துவின் வேலையை குறித்த
ஒற்றுமை.
அனைவரும் கிறிஸ்துவுக்கு சமர்ப்பித்தால், ஒருவருக்கொருவர்
சமர்ப்பிப்பார்கள். பவுல் சிந்தனையின் ஒற்றுமைக்காகவும்,
உணர்வில் ஒற்றுமைக்காகவும், ஆவியில் ஒற்றுமைக்காகவும்,
நோக்கத்தின் ஒற்றுமை ஆகியவற்றிற்கு அழைப்பு விடுக்கிறார்.
திருச்சபையின் கவனம் சுவிசேஷத்தை பரப்புவதாக இருக்க
வேண்டும், ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய சமூகத்திற்கும்,
பூமியின் முனைகளிலும் சென்றடைய வேண்டும்.
கர்த்தருடைய வார்த்தையில் மூழ்கிய கிறிஸ்தவர்கள், அதை
பிறருக்கு வழங்கவில்லை என்றால் பிசாசின் கருவியாக
மாறிவிடுவர், ஏனென்றால் அவர்கள் தேங்கின நிலை அடைந்து
தங்கள் மனப்பான்மையில் எல்லாவற்றிலும் குறை
கூறுபவர்களாகின்றனர்.
கிறிஸ்தவர்கள் ஜெபம், வேதத்தை தியானித்தல், அதை போதிப்பது,
பிறரை சந்தித்தல், சாட்சியாக ஜீவித்தல், சுவிசேஷம் சொல்லுதல்
ஆகியவற்றைப் போன்ற ஆவிக்குரிய காரியங்களில் மிகவும்
ஊக்கத்துடன் பங்கேற்க வேண்டும்.
இன்று, கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும் செய்கிறார்கள், ஆனால்
கர்த்தருடைய வேலையை தவிர. சுயநல குறிக்கோள்களுக்காக
மிகவும் பரபரப்போடு இருந்து, கர்த்தருடைய வேலையை
புறக்கணிப்பதும் ஒரு பாவம்.
அனைத்து சுயநல எண்ணங்களும் மற்றும் மனித பெருமையும் பிற
கிறிஸ்தவரின் நலன்களுக்காக உட்பட்டிருக்க வேண்டும்.
தாழ்மையுடைய மனம் ஒருவருடைய தனிப்பட்ட உரிமைகள்
மற்றும் நிலைகளை மற்றவர்களுக்கு அளிக்கிறது.
பல முறை, கிறிஸ்தவர்கள் இவ்வாறு சொல்வதை நாம்
கேட்டிருக்கிறோம், "இது என்னுடைய உரிமைகள், பிற
கிறிஸ்தவர்கள் என்ன சொன்னாலும் நான் என் உரிமைகளை
விட்டுத்தரமாட்டேன்", இது தாழ்மை நிறைந்த மனதல்ல.
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செய்முறை நம்முடைய
சொந்த நலன்களை கவனிப்பது அல்ல, ஆனால் மற்றவர்களின்
நலன்களுக்காக செயல்படுவது.
தாழ்மையினால் மட்டுமே ஒருமைப்பாட்டை அடைய முடியும்,
ஏனென்றால் நமது பெருமை மற்றும் நமது சுயநல நன்மைகளைத்
தொடரும் நமது விருப்பத்தை நாம் கையாள்கிறோம்.
நாம் மற்றவர்களின் நலன்களைப் பார்த்தால், நம்மிடையே சில
வேறுபாடுகளே இருக்கும்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் கர்த்தருக்கு முன் ஒரே நிலையில்
உள்ளனர், ஒவ்வொருவரும் கர்த்தரால் சமமாக
நேசிக்கப்படுகின்றனர் மற்றும் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு சமமாக
விசேஷித்தமானவர்கள்.
நாம் கர்த்தரை புரிந்துகொள்ளும் நம்முடைய குணாதிசயங்கள், நம்
வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவரால்
சுத்திகரிக்கப்பட்டு, பண்படுத்தப்படுகிறோம்.
நாம் ஆவிக்குரிய பரிசுகளில் வேறுபடுகிறோம், நமக்கு
ஒவ்வொருவருடைய பரிசும் தேவை. கிறிஸ்துவுக்கு இருந்தது
போல இது உங்களுடைய மனதிலும் இருக்கட்டும் என்று பவுல்
முடிக்கிறார்.
பவுல் கடுமையான, நாசமாக்குகிற, விமர்சிக்கின்ற, எதிர்மறையான
அணுகுமுறையுடன் செயல்படக்கூடாது என்று வலியுறுத்துகிறார்.
இத்தகைய மனப்பான்மைகள் கிறிஸ்தவர்களை பிரிப்பதற்கான
சாத்தானின் ஆயுதங்களாக மாறும்.
ஜெபிப்போம்:
அன்பான தேவனே, எங்கள் சக விசுவாசிகளுக்கு ஆறுதல்
செய்கிறவராகவும், இரக்கமுள்ளவராகவும், அன்பான
தோழமையோடு இருக்கவும் எங்களுக்கு உதவுங்கள். எங்கள் சபை
உறுப்பினர்கள் அனைவருக்கும் மனத்தாழ்மையிலும்,
ஒருமைப்பாட்டிலும் வளர உதவுவதற்கு நாங்கள் ஊக்கமளிக்க
எங்களுக்கு உதவுங்கள். பரிசுத்த ஆவியானவாரே எங்களை
வழிநடத்துமாறு உம்மை கேட்கிறோம்.
இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Create your
podcast in
minutes
It is Free