பிலிப்பியர் 2: 5-8
கிறிஸ்துவின் சிந்தை
இயேசு கிறிஸ்துவின் உதாரணங்களைப் பவுல் இங்கு
சுட்டிக்காட்டுகிறார். பிலிப்பிய திருச்சபை கிறிஸ்துவுக்கு
சொந்தமானது, அவருடைய அடிச்சுவடுகளில், சபை நடக்க
வேண்டும். உங்கள் அணுகுமுறை கிறிஸ்து இயேசுவின்
சிந்தையைப் போன்று இருக்க வேண்டும் என்று அவர்
கூறுகிறார்.
அவர் மாம்ச ரூபமாக வந்து பூமியில் நடந்தபோது
தேவனுடைய குணாதிசயத்தை வெளிப்படுத்திய சிந்தை
ஏற்கனவே அவருடன் அவதரித்த நிலையில் இருந்தது.
மரியாள், தனது மகனாக இயேசுவைப் பெற்றெடுத்த போது
அவர்(இயேசு) நம் இரட்சகராக மாறவில்லை, ஆனால்,
அவர் ஏற்கனவே, பிதாவின் மார்பில் நம் இரட்சகராக
இருந்தார்.
இயேசு காலத்தின் முழுமையில் இரட்சகராக ஆனார்,
ஏனென்றால் அவர் ஆதியில் இருந்தே இருந்தார். மீட்பின்
வரலாற்றை பூமியில் இந்த காலங்களில் நாம் உணரலாம்
ஆனால் அது உலகம் தோன்றுவதற்கு முன்பதாகவே
உருவாகிற்று, கிறிஸ்து இயேசு இருந்தபோது, பவுல்
"தேவனுடைய சாயலாக" என்று எழுதியது போல.
அதன் முக்கியத்துவம் அவருடைய மகிமை மற்றும்
மகத்துவம்; அவரது பிரகாசமான தோற்றம் தேவனின்
இயல்பை பிரதிபலிக்கிறது.
ஆதாம் ஏவாளின் பேச்சைக் கேட்டு நன்மை தீமை
அறியத்தக்க விருட்சத்தின் கனியை சாப்பிட்டபோது.
அதுதான் கலகம், கர்த்தரிடமிருந்து எடுத்து, நன்மை தீமை
அறியத்தக்க சட்டத்திடம் கொடுக்கும் முயற்சி, இதையே
கொள்ளையடித்தல் என்று பவுல் விளக்குகிறார்.
நம்மிடம் இருப்பது, மற்றும் பெற்றிருக்கும்
எல்லாவற்றிற்கும் நாம் கர்த்தருக்குக்
கடமைப்பட்டிருக்கிறோம், ஆனால் கர்த்தர் நமக்கு எந்த
வகையிலும் கடமைப்பட்டவர் அல்ல. அவர்
சுதந்திரமானவர், கர்த்தரால் மட்டுமே சுதந்திரமாக இருக்க
முடியும், அவருக்கு விருப்பமானதை செய்ய முடியும்.
இயேசு தேவனைப் போல இருப்பதைப் பயன்படுத்திக்
கொள்ளவில்லை, மாறாக அவர் தன்னை
வெறுமையாக்கிக் கொண்டார், மனிதனின் தோற்றத்தில்
பிறந்த ஒரு அடிமையின் ரூபத்தை எடுத்துக் கொண்டார்.
2 சாமுவேல் 6:12 இல், தாவீது ராஜா தனது அரச
கவசத்தை களைந்து மற்றவர்களைப் போல ஆடை
அணிந்து, உடன்படிக்கை பெட்டியின் முன் துள்ளி
நடனமாடி, மக்களிடையே ஒருவராக இருந்தார். என்ன
நடந்தது என்பதை கொஞ்சம் நாம் நன்றாகப்
புரிந்துகொள்ள உதவுவதற்கு இது ஒரு உதாரணம்.
இயேசு மகிமையிலிருந்து அவமானம், மகத்துவதிலிருந்து
அடிமைத்தனம் வரை, தந்தையின் மார்பில்
இருப்பதிலிருந்து ஒரு மனிதனாகக் காணப்பட்டு, தேவனின்
ரூபமாய் இருந்து மரணம் வரை தாழ்ந்தவராக
அனைத்தையும் கடந்து சென்றார்.
காரணம் 2 கொரிந்தியர் 8: 9 இல் நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே:
அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடயை
தரித்திரதினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்
நிமித்தம் தரித்திரரானார் என்று எழுதியிருக்கிறது.
பவுல் இங்கு இதை குறிப்பிடவில்லை, ஏனென்றால் அவர்
கிறிஸ்துவின் முழு மனத்தாழ்மை மனப்பான்மையையும்,
கசப்பானதாய் இருந்தாலும் அதே நேரத்தில்
அனைத்தையும் மகிமையால் முடித்த முடிவின் மீது நமது
கவனத்தை செலுத்த பவுல் விரும்புகிறார்.
நமது அணுகுமுறை கிறிஸ்து இயேசுவைப் போல
இருக்கட்டும். அவர் செய்ததை நம்மால் செய்ய முடியாது,
நாமும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவருடைய
சிந்தையும், அவர் காட்டிய அணுகுமுறையும்,
நம்முடையதாக இருக்க வேண்டும், விசுவாசத்தோடு
கிறிஸ்துவில் பொறிக்கப்பட்டு, அவருடைய
அடிச்சுவடுகளில் நடக்க அழைக்கப்படும் மக்களாக இருக்க
வேண்டும்.
ஜெபம் செய்வோம்:
அன்புள்ள ஆண்டவரே, பரிசுத்த ஆவியானவர் இந்த
வார்த்தைகளை எங்கள் வாழ்வில் நடைமுறை படுத்த
வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம். பிரிந்த உறவு
எதுவாக இருந்தாலும், அதில் கிறிஸ்துவின் சிந்தைக்
கொண்ட நாம் அதை வெளிப்படுத்த அனுமதிக்க
வேண்டுகிறோம். எங்களின் பிடிவாதமான விருப்பங்கள்
நிபந்தனைகளை விட்டு, சமாதானமாக வாழ
உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Create your
podcast in
minutes
It is Free