கெய்ரோஸ்
மார்க்கு 1: 14-15
14. யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய
ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து:
15. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை
விசுவாசியுங்கள் என்றார்.
கெய்ரோஸ் கர்த்தரின் நோக்கத்தில் நியமிக்கப்பட்ட நேரம்.
கெய்ரோஸ் தருணம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் வெற்றிக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
இது கர்த்தரின் உறுதியான வேலையை நமக்கு நிரூபிக்கிறது மற்றும் நமது ஊழியம் வேலை
மற்றும் ஜெபங்கள் வீணாகாது என்று உறுதியளிக்கிறது.
கர்த்தர் நம்மிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்பதையும், நம் வாழ்வின் ஒவ்வொரு
பகுதியையும் பற்றி அவர் விசாரிக்கிறவராக இருக்கிறார் என்பதையும் இது நமக்கு
நினைவூட்டுகிறது.
கெய்ரோஸ் தருணங்கள் ஒரு விசுவாசி தேடும் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயத்தின்
வெளிப்பாடாக இருக்கலாம்.
கெய்ரோஸ் தருணங்கள் கர்த்தரின் வல்லமையையும் ஞானத்தையும் நிரூபிக்கின்றன.
அவர் காலங்களுக்கும் நமது நேரங்களுக்கும் அப்பாற்பட்டவர். நாம் விரும்பும் போது அவர்
வெளிப்படுத்துவதில்லை, அவருடைய நேரத்தில் செயல்படுகிறார்.
கர்த்தர் இஸ்ரவேல் தேசத்தை உருவாக்கத் தயாராக இருந்தபோது அவர் ஆபிரகாமோடு
இடைப்பட்டார். (ஆதியாகமம் 12: 1-2).
எகிப்தியர்களின் கைகளில் இருந்து இஸ்ரவேல் விடுவிக்கப்பட வேண்டியிருந்தபோது, அவர்
மோசேயோடு இடைப்பட்டார். (ஆதியாகமம் 3: 1-10).
இவ்வுலகத்தின் இரட்சகராகிய கிறிஸ்து இயேசு இவ்வுலகில் பிறப்பதற்கு மரியாளோடு அவர்
இடைப்படுவதை காண்கிறோம். (மத்தேயு 1: 18-21: லூக்கா 1: 26-38).
அப்போஸ்தலர் 9: 1-8 இல், சுவிசேஷம் புறஜாதியினரிடையே பிரசங்கிக்கப்பட வேண்டிய
நேரத்தில் கர்த்தர் அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்க்கையில் இடைப்பட்டார்.
கைரோஸ் தருணங்களில், ஆபிரகாம் அவரது வாழ்க்கையில் முற்றிலும் அறியப்படாத
எதிர்காலத்துடன், கர்த்தரை நம்ப வேண்டியிருந்தது.
கர்த்தர் ஆபிரகாமிடம் எந்த தேசத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்லமால் "உனக்குக்
காண்பிக்கும் தேசத்துக்குப் போ" என்று சொன்னார்.
அவர் ஆபிரகாமிடம், எப்படி என்று விளக்காமல் "அவருக்கு ஒரு மகன் இருப்பான் என்று
கூறினார்.
ஆபிரகாமுடனான கர்த்தரின் உறவு - உன் கண்களை மூடிக்கொண்டு என் கரங்களை பிடித்து
கொள். அது உன் கைரோஸ் தருணம்.
கெய்ரோஸ் தருணம் வந்துவிட்டது. இது நமது நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கிறது மற்றும்
நம் வாழ்க்கையை உருமாற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறது.
யாக்கோபு 4: 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.
ஜெபிப்போம்:
பரலோகத் தகப்பனே, நீர் என் வாழ்க்கையில் நியமித்த தருணத்தைப் கைப்பற்ற எனக்கு
உதவுங்கள். எங்கள் வாழ்க்கையில் நீர் என்ன செய்ய விரும்புகிறீர் என்பதற்கான
நடவடிக்கையை எடுக்க எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்
Create your
podcast in
minutes
It is Free