உங்கள் விசுவாசம் எங்கே?
லூக்கா 8: 22-25
இயேசுவின் சீஷராக, நாம் அடிக்கடி கேட்கும் கேள்வி, கர்த்தாவே,
வாழ்க்கை மிகவும் கடினமான போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? என்
ஜீவனை நான் பிடித்துக்கொண்டிருந்தையில் நீர் எங்கே இருந்தீர்கள்?
எல்லா விஷயங்களும் நமக்கு எதிராக தோன்றும்போது, நாம்
விரக்தியால் செய்வதறியாமல் இருக்கும்போது, இயேசு கிறிஸ்துவின்
மீது நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகிறோம். பெரும்பாலும்,
வாழ்க்கையின் புயல்கள் நம்மை நம்பிக்கையற்ற உணர்வுகளுக்கு
கொண்டு செல்கின்றன.
நாம் பயத்துடன் இருக்கிறோம். நாம் தோல்வியுற்றோம் என்று
நம்புகிறோம். இனி அடுத்த புயலில் இருந்து தப்பிக்க முடியுமா என்று
தெரியாது, மேலும் கர்த்தர் நம்மை காப்பதில்லை போன்று தெரிகிறது.
இந்தப் பகுதியில் சுழல்காற்று உண்டானதால், அவர்களின் உயிருக்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டதை நாம் பார்க்கிறோம். இயேசு முதலில் புயலைக்
கண்டித்தார், பின்னர் சீஷர்களை கண்டித்தார் - அவர்கள் அவிசுவாசியை
இருந்தார்கள்.
கிறிஸ்துவை உடையவர்களாகிய நாம் ஒருபோதும் பயத்தில்
வாழக்கூடாது, இருப்பினும் நாம் பெரும்பாலும் பயப்படுகிறோம்.
இயேசுவின் அர்ப்பணிப்பை நாம் கேள்விக்குள்ளாக்குவதால், நாமும்
அந்த சீஷர்களை போலாகிறோம்.
நம்முடைய அழைப்பு ஒன்றுதான். நாம் கர்த்தரின் நன்மைகள் மீது
சந்தேகம் கொள்ளாமல் நம்பிக்கை கொள்ள வேண்டும். இயேசுவின் மீது
முழு விசுவாசம் கொள்ள வேண்டும்.
அவர்களுடைய அவிசுவாசம் அந்த அச்சுறுத்தும் சூழ்நிலைக்கு
பயப்படுவதைப் பற்றியது அல்ல, ஆனால் இயேசு கடலின் அக்கரைக்குப்
போவோம் என்று சொன்னதை கேட்க அவர்கள் விரும்பாததே (லூக்கா
8:22).
இயேசு, "நம்மால் முடிந்தவரை சிறந்ததை செய்து கடலின் அக்கரைக்கு
போவோம், நாம் அனைவரும் நீரில் மூழ்குவதற்கு அதிக வாய்ப்பு
உள்ளது என்று சொல்லவில்லை.
புயல்கள் போன்ற கடினமான சூழ்நிலைகள் அவிசுவாசத்தினால்
வருவதில்லை.
அவிசுவாசம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு தொடர்புடைய ஒரு
வாக்குத்தத்ததையோ, கர்த்தரின் கட்டளையையோ நிராகரிப்பதாகும்.
கலிலேயா கடலைக் கடக்கும் படகில் மேசியாவை மடிந்து போவதை
கர்த்தர் அனுமதிக்க மாட்டார் என்பதை சீஷர்களும் அறிந்திருக்க
வேண்டும்.
மெசியாவாகிய இயேசுவின் வாழ்க்கை கலிலேயா கடலில் முடிவது
சாத்தியமில்லை.
நாம் அவிசுவாசத்தை நீக்கி விசுவாசம் கொள்ள வேண்டும். 1 யோவான்
4: 4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை
ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும்
உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
கர்த்தர் நம் இருதயத்தை, நம் வாழ்க்கையை, நம் குடும்பத்தை, நம்
தேசத்தை உயிர்ப்பிக்க தயாராக இருக்கிறார் என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
இது போன்ற எழுப்புதல் நேரத்தில் இந்த சாமூகத்தை கர்த்தர்
தேர்ந்தெடுத்திருக்கிறார், என்பதை அவிசுவாசமோ அல்லது நம்ப
விரும்பாததோ, கர்த்தர் நமக்கு நியமித்த கெய்ரோஸ் தருணத்தை
இழக்கச் செய்யும்.
இயேசு காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டியபோது,
அவர்கள் ஆச்சரியப்பட்டனர். கர்த்தரின் வழிநடுத்துதலுக்கு நாம்
அனுமதிக்கும்போது, அவருடைய படைப்புகளில், மனிதர்களில், நமது
ஆவிக்குரிய வாழ்வில் அவர் வல்லமை வெளிப்படுவதை காணலாம்.
நாம் கர்த்தர் மீது விசுவாசமாக இருக்கும்போதும், அவருடைய
வல்லமையும் மகிமையும் வெளிப்படுகின்றது, அவருடைய
மாட்சிமையை நாம் விசுவாசிக்கும் பொது அந்த விசுவாசமே நம்மை
சூழ்ந்துகொள்ளும்.
அப்போது கடலின் சீற்றத்தை நீங்கள் அமைதிப்படுத்தலாம்; அலைகள்
எழும்போது, அவற்றை நிறுத்த அவர் உங்களுக்கு உதவுவார்.
கர்த்தர் நம்மை இக்காலத்தில் அலைகளுக்கு மேலே நாம் விசுவாசத்தில்
எழும்பும்படி கேட்கிறார்.
ஜெபிப்போம்:
அன்புள்ள ஆண்டவரே, நாங்கள் கடந்த நாள்களில் நம்பிக்கை
இல்லாமலும், அவிசுவாசியாய் வாழ்ந்ததை ஒப்புக்கொள்கிறோம்.
விசுவாசத்தில் புயலுக்கு மேலே எழும்ப எங்களுக்கு உதவுங்கள்.
விசுவாசத்தைப் பற்றிக்கொள்ள எங்களுக்கு பலம் கொடுங்கள்.
இயேசுவின் நாமத்தில். ஆமென்
Create your
podcast in
minutes
It is Free