உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு தேவ ஆவியால் தொடப்பட்டது.
எசேகியல் 37
எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கின் நடுவில் எசேகியேலை நிறுத்தி
அவ்வெலும்புகளுக்கு தீர்க்கதரிசனம் உரைக்கும் படி தேவன் கூறினார். அவர் தீர்க்க தீர்கதரிசனம் உரைத்த போது தசை நாண்கள் மற்றும் சதை தோன்றி தோல் அவற்றை மூடியது,
ஆனால் அவற்றில் சுவாசம் இல்லை.தேவ ஆவி சுவாசமாக மாறி அது காற்றின் நான்கு திசைகளில் இருந்து வந்து அது மாம்சத்தின் நாசியில் ஊடுருவி அவற்றிற்கு உயர் கொடுக்கம் என்று தீர்க்கதரிசனம் உரைக்கும் வரை அவைகளில் உயிர் இல்லை.
தேவன் எசேகியலிடம் மீண்டும் அந்த எலும்புகளிடம் தீர்க்கதரிசனம் உரைக்கும் படி கூறினார்.அவர் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கியவுடன் தேவ ஆவி உலர்ந்த எலும்புகளுக்கு உயிரூட்டியது.
பிரிக்கப்பட்ட எலும்புகள் ஒன்றாக இணைந்து முழுமையாக எலும்பு கூடுகளை உருவாக்கியது.அந்த எலும்புகளின்
மேல் மஜ்ஜை மற்றும் தசை தோன்றி அவற்றை இனணத்தது. தேவ ஆவி உலர்ந்த எலும்புகளுக்குள் பிரவேசிக்க அவர்கள் உயிரடைந்து காலூன்றி மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
இந்த பாழடைந்த உயிரற்ற உடல்களின் நிலைமை தான் என்ன? அவற்றின் இறந்த நிலையை பயனுள்ள ஒன்றாக மீட்கவும் உற்சாகப்படுத்தவும் படைத்தவரின் தொடுதல் தேவை.இயற்க்கையாக இறந்தவர்தர்கள் இயற்க்கைக்கு அப்பாற்பட்டு உயிர் பெற்றார்கள்.
நம்முடைய அன்றாட வாழ்விலும் கவலைகள் சந்தேகங்கள் அச்சங்கள் ஆகியவற்றால் பினணக்கப்பட்டு குழப்பம் அடைகிறோம்.நம்மை உற்சாகப்படுத்தவும் உயிரூட்டவும் தேவனின் தொடுதல் தேவை.அனைத்து மின் கம்பிளும், இனைப்புகளும் சரியாக பொறுத்தப்பட்டிருந்தாலும் மின்னோட்டம் கடந்து செல்லாவிட்டால், மின் விளக்கு ஒளிராது.
யோவான் 8.12-ல் இயேசு இவ்வாறு கூறுகிறார்.நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன் என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்.எனவே நாமும் நம்முடைய ஒளியை இயேசு கிறிஸ்துவிலிருந்த பெற வேண்டும்.
அவ்வாறு செய்தால் நாமும் உயிர்பெற்று இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆற்றலைப் பெறுவோம்.பரிசுத்த ஆவியின் சுவாசத்தின் மூலம் வெற்று நிலைமைகள் நம்பிக்கையற்ற சூல்நிலைகளை வென்று தேவ அபிஷேகத்தைப்பெற்று வாழ்வோம்.
அன்று பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் தேவ ஆவி உள்ளே வந்தது.இந்த தேவ ஆவி இன்று நமக்குள்ளும்,நம் தேசத்தின் மீதும்,
முழு பூமியின் மீதும் உள்ளது.
இதைத்தான் ஆதி 1;1-2 ம் வசனங்களில் ஆதியிலே தேவ ஆவி
தண்ணீரின் மேல் அசைவாடிக்கொண்டிருந்தது என்று காண்கிறோம்.
பாவமும் மரணமும் ஆதாம் மற்றும் ஏவாள் வழியாக, உலகிற்குள் வந்தது.
ஒரு மனிதனின்ன மூலம் பாவமும் பாவத்தின் மூலம் மரணமும் உலகிற்குள் வந்தது.எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால் மரணம் எல்லோருக்கும் வந்தது என்று ரோமர் 5;12 ல் வாசிக்கின்றோம்.ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலம் வாழ்வும் மீட்பும் பெற்றோம்.
எசேக்கியல் 37;24 ல் தாவீதின் வழி தோன்றலில் வந்த மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ் இஸ்ரேல் தேசம் இருக்கும்
என்று தேவன் அதன் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
யூதாவுக்கும் எருலலேமிற்கும் இடையே உள்நாட்டு மோதல்களையம்
வெளிநாடுகளின் அச்சுறுத்தல்களையும் எதிர் கொண்ட இஸ்ரேலூக்கு இது ஒரு புகழ் பெற்ற எதிர்காலம் எனலாம்.
யோவான் 1;1-5 வசனங்கள் ஆதியில் வார்த்தையாக இருந்த இயேசு
கிறிஸ்து எல்லா மனித இனத்திற்கு ஒளியாகவும், பரலோகத்தில்
இருக்கும் தம் தந்தையுடன் நம்மை ஒன்றிணைக்கவும் மீட்டெடுக்கவும் வந்தார் என்று குறிப்பிடுகிறது.
இதை நம் நோக்கமாகவும் நம் தலைமுறைகளின் ஆசீர்வாதமாகவும்
ஏற்றுக் கொண்டு பரிசுத்த ஆவியானவரின் துணையோடு நல்லதொரு போராடத்தை போராடி ஓட்டத்தை ஓடி முடிப்போம்.
ஜெபம்
பரலோக தகப்பனே உயிரற்ற எங்கள் வாழ்க்கையும் எங்கள்
குடும்பங்களையும் நண்பர்களின் குடும்பங்களையும் பற்றி பேசுவதற்கு தீர்கதரிசிகளையும் எழுப்பியதற்கு நன்றி.இன்று நாங்கள் உமக்காக எழும்பி பிரகாசிக்க ,எங்களை பரிசுத்த ஆவியால் அபிஷேகியும்.
உம் வார்த்தையானது எலும்பு, மஜ்ஜை மற்றும் தசைகளுக்குள்
ஊடுருவி,எங்களை முழுமையாக மாற்றி உமது நோக்கத்திற்காக
எங்களை ஆயத்தப்படுத்தி உம் சித்தத்தை எங்களுக்கு வெளிப்படுத்தட்டும் .ஆமென்.