யோவான் 4: 1-26
அந்நியர்களுக்கு சாட்சியாய் இருத்தல்
யாக்கோபின் கிணற்றினருகே இயேசுவுக்கு ஒரு தெய்வீக நியமனம் இருந்தது, அங்கு அவர்
ஒரு சமாரியப் பெண்ணிடம் உதவி கேட்டார். இது முற்றிலும் எதிர்பாராதது.
அந்த சமாரிய ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள், அவள் ப்ரெம்பாலும் யாரும் வராத ஒரு
வேளையில் வந்தாள், அவள் தனியாக வந்தாள்.
அந்த சமயத்தில் ஒரு யூத நபர் ஒரு சமாரியனின் கோப்பையிலிருந்து தண்ணீர் குடிப்பதோ
அல்லது தயவு கேட்பதோ மிகவும் அசாதாரணமானது, அதனால் இயேசுவின் வார்த்தை
அந்தப் பெண்ணை ஆச்சரியப்படுத்தியது.
இயேசு சமாரியப் பெண்ணிடம் உதவியை கேட்டதால் அவருடைய மகிமையை குறைந்து
போகவில்லை மாறாக, அவர் அவளோடு அவளுக்கு புரியாத ஆவிக்குரிய விஷயங்களை
பகிர்ந்தார்.
அவர் கர்த்தர் அவளுக்கு எவ்வளவு தேவை என்பதை உணர்த்தி அவளுக்குள் ஒரு ஆவிக்குரிய
தாகத்தை உருவாக்கினார்.
இந்தப் பெண் தனது இயற்கையான தாகத்தைத் தணிக்க தினமும் இந்த கிணற்றுக்கு வர
வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார், எனவே அவர் தாகத்தை கொண்டு ஆவிக்குரிய
தேவை மற்றும் ஏக்கத்தை விளக்கினார்.
அந்தப் பெண்ணின் கேள்விக்கு இயேசு நேரடியாக பதிலளிக்கவில்லை. அதற்கு பதிலாக,
அவள் மேலும் ஆர்வமடையவும், கூடுதல் கேள்விகளை எழுப்பவும் படிக்கு அவர்
பதிலளித்தார்.
எனவே, அந்த பெண் இயேசுவிடம் தண்ணீர் தருமாறு கேட்டபோது, அவர் அவளுடைய
பாவமான வாழ்க்கையைப் பற்றி பேசினார், மேலும் அவளுடைய கணவர் அங்கு வரும்படி
அழைக்குமாறு கூறினார்.
அவளது பாவ வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, மேலும் அவள் எதை அதிகம்
விரும்புகிறாள், அவளுடைய பாவமா அல்லது மேசியாவா என்பதை அவள் முடிவு செய்ய
வேண்டும் என்பதால் இயேசு இந்த பிரச்சினையை பற்றி பேசினார்.
இயேசு அவளிடம் உண்மையாக இருந்தார், ஆனால் அன்பாகவும் இருந்தார், அவர் அவளை
கண்டிக்கவில்லை. அவளை இறக்கத்துடன் மரியாதையுடனும் நடத்தினார், அவள்
எப்பொழுதும் எதிர்பார்த்திருந்த நம்பிக்கையை அவளுக்கு வெளிப்படுத்தினார்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தீவிரம் அடைய வேண்டும்.
எந்தக் கவனத்திற்கும் தகுதியற்ற, கர்த்தரிடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்த ஒரு
ஒதுக்கட்ட பெண் என்று அக்கால சமூகத்தால் கருதப்பட்ட பெண்ணுடன் இயேசு எவ்வாறு
தொடர்புகொண்டார் என்பதை இங்கே பார்க்கிறோம்.
நாம் மற்றவர்கள் மீது உண்மையான ஆர்வத்தை வெளிப்படுத்த வேண்டும், அதை
எதிர்பார்க்காதவர்களிடம் அன்பு காண்பித்து, அவர்களை விசாரித்து, அவர்களிடன்
உண்மையான அக்கறை காட்டவும் வேண்டும்.
இயேசு நித்திய ஜீவனைப் பற்றி பேசினாலும், அந்த பெண் இன்னும் இயேசு பேசும்
தன்மையைப் புரிந்து கொள்ளவில்லை, ஆவிக்குரிய உண்மையைப் பார்க்கவோ
புரிந்துகொள்ளவோ முடியாதபடி சாத்தான் கண்களை குருடாக்குகிறான் என்பதை நினைவில்
வையுங்கள் (2 கொரிந்தியர் 4: 4).
ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசுபவர்களுக்கு புரியாதபோது சோர்வடைய
வேண்டாம்.
சமுதாயத்தால் அவமதிக்கப்பட்டாலும் கர்த்தரால் நேசிக்கப்படுவதால் அவர்களை
அணுகுவதில் இயேசுவை முன்மாதிரியைப் பின்பற்றுவோம்.
தேவனை தெரியாத அவர்களுக்குத் அவரைபற்றி நாம் சொல்ல வேண்டும்.
அவர்கள் பெற முடியும் என்று அவர்களுக்கு தெரியாத நம்பிக்கையை, அவர்கள்
பெற்றுக்கொள்ள நாம் சத்தியத்தை அன்புடன் அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
ஜெபிப்போம்:
பரலோகத் தகப்பனே, இந்தப் பெண்ணின் அழகான கதைக்கும், இயேசு தன்னை பற்றியும்,
தனது வேலையை வெளிப்படுத்துவதற்காக அருமையாக அவளுக்கு வேதவசனங்களை
விளக்கியதற்காக நன்றி. கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தியதற்கும், அவர் மீதான
விசுவாசத்தின் மூலம் நாம் அவருடைய ஜீவத் தண்ணீரைக் பெறவும்,அது ஒரு கிணற்று நீராக
நித்திய ஜீவனாகப் பெருக்குவதற்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்
Create your
podcast in
minutes
It is Free