யோவான் 4: 46-54
பகுத்தறிவாளருக்கு சாட்சியாய்
கப்பர்நாகூமிலே தங்குவதற்காக இயேசு அங்கு வந்து சேர்ந்த நேரத்தில்,
அவரை சந்திக்க பிரபுக்களில் ஒருவன் 30 கிலோமீட்டர் பயணம் செய்து
கானா ஊருக்கு வந்தான்.
அவர் ராஜாவின் மனுஷரில் ஒருவரானதினால் ஏரோதின் அதிகாரியாக
இருந்திருக்கக்கூடும்.
இயேசுவை சந்திக்க வந்த பிரபு, பாதிக்கப்பட்ட தன் பிள்ளைகளுக்காய்
அவரை காண வந்த பல பெற்றோர்களில் ஒருவர்.
அவர் மரணத்திற்கு போராடும் நோய்வாய்ப்பட்ட குழந்தையின்
தந்தையாக அங்கு ஆர்வத்துடனும் அவசரத்துடனும் வந்தார்.
இந்த அற்புதம் இயேசுவின் குறிப்பிடத்தக்க அற்புதத்தில் ஒன்று.
இந்த பிரபுவின் இருதயத்திலிருந்த சிறிய தீப்பொறிபோல உள்ள
நம்பிக்கை அவரால் உருவானது, அதுவே தெளிவான நீடித்த சுடராக
எரிந்து, அவருக்கும் அவர் வீட்டிற்கும் ஆறுதலையும் வெளிச்சத்தையும்
தந்தது.
அந்த பிரபு இயேசுவிடம் அவருடைய அந்தஸ்தின் அடிப்படையில்
முறையிடவில்லை ஆனால் அவரது மகனின் பெரும் தேவையின்
அடிப்படையில் அங்கு வந்தார். ஒரு பிரபுவாகவோ ராஜாக்களின்
மனிதராகவோ அவர் இயேசுவிடம் வருவது அவருக்கு எந்த பலனும்
இல்லை.
ஒரு அற்புதத்தை அந்த பிரபு இயேசுவிடம் கேட்கவேண்டாம் என்று
அவருக்கு உணர்த்தினார்.
ஆயினும் இயேசு அவருக்கு உணர்த்தியது, இயேசு தேடுவதை அல்ல
ஆனால் அற்புதத்தை மட்டுமே தேடும் நம்பிக்கை வேண்டாம் என்று
அந்த பிரபு சரியாக புரிந்துகொண்டார் என்பதை காட்டுகிறது.
இயேசு இந்த மனிதனின் விசுவாசத்தை கடுமையாக சோதித்தார்,
அவரை இயேசுவின் வார்த்தையை மட்டும் நம்பும்படி செய்து,
வெளிப்புறமாக எதையும் செய்யவில்லை.
சோதனை இருந்தபோதிலும், அந்த மனிதன் இயேசுவின் வார்த்தையை
ஏற்றுக்கொண்டு புறப்பட்டான்.
உண்மையான விசுவாசம் என்பது இயேசு கூறும் அவருடைய
வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொள்வது என்று அந்த பிரபு
நிரூபித்தார்.
அடையாளங்கள் மற்றும் அற்புதங்களை கண்டால் மட்டுமே
விசுவாசிப்பவர்களை இயேசு கண்டித்தார்.
இந்த குணப்படுத்துதலில் இயேசு எந்த வியத்தகு விளைவுகளையும்
பயன்படுத்தவில்லை.
உண்மையான விசுவாசம் அற்புதத்தின் வெளிப்புற ஆர்ப்பாட்டத்தை
உணர்ந்து ஏற்கலாம் ஆனால் அது அவசியமனதில்லை.
அற்புதம் நிகழ்ந்துவிட்டது என்று காண்பதற்கு முன்பே பிரபு அதை
நம்பினார்.
"உன் குமாரன் பிழைத்திருக்கிறான்" என்று இயேசு அறிவித்தபோது,
அவன் உண்மையில் குணமடைந்தான்.
இயேசுவின் அற்புத வல்லமை அந்த பிரபு மற்றும் அவரது குடும்பத்தில்
அதிக நம்பிக்கையை வளர்த்தது. அவர் முன்பு நம்பினார், ஆனால்
இப்போது அதிகமாக நம்பினார்.
கர்த்தரின் வல்லமையை பற்றிய அவரது தனிப்பட்ட அனுபவத்தால்
அவரது நம்பிக்கை ஆழமானது.
கர்த்தாரிடத்திலிருந்து வரும் அடையாளங்களும் அற்புதங்களும் நல்ல
காரியங்களே, ஆனால் அதுவே நம் விசுவாசத்தின் அடித்தளமாக
இருக்கக்கூடாது. கர்த்தரை நமக்கு நிரூபிக்க நாம் அவைகளை சார்ந்து
இருக்கக் கூடாது.
அடையாளங்களும் அற்புதங்களும் மட்டுமே நம் இருதயத்தை மாற்ற
முடியாது.
இஸ்ரவேல் ஜனங்கள் சினாய் மலையில் நம்பமுடியாத
அடையாளங்களைக் கண்டும் மற்றும் கர்த்தரின் குரலைக் கூட
கேட்டார்கள், (யாத்திராகமம் 19: 16-20: 1), ஆனால் சிறிது நேரம் கழித்து
அவர்கள் தங்கக் கன்றுக்குட்டியை வணங்கினர் (யாத்திராகமம் 32: 1-6).
இன்று நம்மிடையே அடையாளங்களையும் அற்புதங்களையும்
செய்யும்படி நாம் கர்த்தரிடம் கேட்கும் போது, விசுவாசத்தையே கர்த்தர்
நம்மிடம் விரும்புகிறார்.
சமாரிய ஸ்திரீ எந்த அடையாளமும் இல்லாமல் விசுவாசித்தாள், பிரபு
எந்த அடையாளமும் இல்லாமல் விசுவாசித்தார்.
இந்த நாட்களில் கூட எந்த அறிகுறிகளும் இல்லாமல் நம்மூலமாய்
கர்த்தர் வேலை செய்ய முடியும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும்.
அவர் மீது நம் விசுவாசத்தை வளர்ப்போம்.
ஜெபிப்போம்:
பரலோகத் தகப்பனே, உண்மையான விசுவாசம் செயலில் உள்ளது
என்று நாங்கள் புரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி ஆண்டவரே.
நற்செய்தியைப் பகிர்வதில் எங்கள் விசுவாசம் அதிகரிக்க எங்களுக்கு
உதவுங்கள். நாம் மற்றவர்களுடன் நற்செய்தியைப் பகிரும் போது நீர்
எங்களுக்கு பெலன் அளிப்பீர் என்ற நம்பிக்கையை எங்களுக்கு தாரும்.
இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Create your
podcast in
minutes
It is Free