2 கொரிந்தியர் 10: 3-5
உலகத்தின் போர்
நாம் இந்த உலகில் வாழும்போது, சவால்களைத் தவிர்க்க முயற்சிக்காமல் அவற்றை சந்திக்க வேண்டும். நாம் அவற்றிலிருந்து தப்பி ஓட முயற்சிக்காமல், அவற்றை மேற்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் போராட்டங்களையும், நம்மைச் சுற்றியுள்ள கஷ்டங்களை எதிர்கொள்ளாமல், தப்பித்து கொள்ள ஒரு அடைக்கலத்தை தேடி, எந்த சிக்கல்களும் இல்லாமல் ஜீவிக்க முயற்சிப்பது கிறிஸ்துவத்தன்மை அற்றது.
இயேசு பல போராட்டங்களை சந்தித்தார், உணர்வுப்பூர்வமாகவும், உடல் ரீதியாகவும், எல்லா வழிகளிலும் போராட்டங்களை சந்தித்தவர்களுடன் இருந்தார்.
ஒரு கிறிஸ்தவராக இது நம்முடைய பங்கு. ஒரு பிரச்சினையையோ அல்லது சூழ்நிலையையோ அங்கீகரிக்க வேண்டும், அதை புறக்கணிக்க கூடாது.
நாம் இந்த உலகில் வாழ்ந்தாலும் நமது போரின் ஆயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகள் அல்ல.
நாம் வாழ்க்கையை மாமிசத்தில் எதிர்கொள்வதில்லை. நாம் மற்றொரு பரிமாணத்தில் போராடுகிறோம், என்றாலும் நமது போர் பலவீனமானது அல்ல. அது வல்லமை வாய்ந்தது. அது வெற்றி பெறுகிறது, அது வலிமையானது.
போரின் முக்கிய விதிகளில் ஒன்று, உங்கள் எதிரியை அறிந்து கொள்வது. எதிரியின் தந்திரங்கள் உங்களுக்குத் தெரியாவிட்டால் நீங்கள் ஒரு போர் வீரனாக ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
உலக பிரகாரமான ராணுவ போரை போல இது ஆவிக்குரிய போரிலும் உண்மை. போரின் இரண்டாவது விதி, உங்கள் ஆயுதங்களை அறிந்து கொள்ளுங்கள். எதிரியை எவ்வாறு சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள், உங்கள் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராடவில்லை "(எபேசியர் 6:12), என்று அவர் கூறுகிறார். நாம் மனிதர்களின் மனதிலும் சிந்தனையிலும் கிரியை செய்பவர்களுக்கு எதிராக நாம் யுத்தம் செய்கிறோம். மனித சமுதாயத்தில் வளர்ந்து வரும் தீமையை நீங்கள் வேறு எப்படி விளக்க முடியும்?
நாம் கர்த்தருடைய வார்த்தையை போதித்து, உண்மையைக் கற்பித்து, ஒரு புதிய ஏற்பாடு, அல்லது ஒரு வேதாகமத்தையோ அல்லது ஒரு துண்டுப்பிரதிகளையோ ஒருவருக்குக் கொடுத்தால் மட்டும் போதாது. வேதம் நற்செய்தியைப் பரப்புவது பற்றி பேசுவது, இவற்றை அல்ல.
ஒழுக்கமின்மை, அவமானம், பாகால் வழிபாடு, வாதங்களால் வாழும் கொரிந்து நகர மக்களுக்கு பவுல் இதை எவ்வாறு எடுத்துக்காட்டினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பவுல் அவர்களிடம், நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.(1 கொரிந்தியர் 2: 1-2). அதாவது, நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. நான் இந்த உலக ஞானத்துடன் வரவில்லை என்று கூறினார்.
உங்கள் வாதங்களை எதிர் வாதத்துடன் நிறுத்த நான் வரவில்லை. நான் தத்துவ விவாதத்திற்கு வரவில்லை. மனித இரூதயத்தின் பெருமையிலிருந்து விடுதலை மற்றும் ஆறுதல் இயேசு கிறிஸ்துவிடம் உள்ளது என்பதை நான் உங்களுக்கு அறிவிக்க வந்தேன்; பெருமை சிலுவையால் அழிக்கப்பட்டது.
இந்த சிலுவையின் அர்த்தத்தையும், உங்களுக்காக மறித்தவர் என்ன செய்தார் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் அவருடைய பாதத்தில் முழங்கால் படியிடும் போத, உங்கள் வாழ்க்கையில் உங்கள் பெருமையை அழிக்க அவருடைய வல்லமை வெளிப்படுகிறது.
நீங்கள் இதை சமூகத்திற்கு கொண்டு வரும்போது, கர்த்தர் உங்களை வல்லைமையாக பயன்படுத்துவார். அதுதான் நற்செய்தியின் வல்லமை. அதுதான் கிறிஸ்துவை உடையவர்களின் வல்லமை. அது தான் சமூகத்திற்கு உதவும் செய்தி.
இது ஒன்றே வழி, வேறு வழி எதுவும் இல்லை. உலகம் அதன் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய சில மாற்றுகளில் இது ஒன்றல்ல.
இது ஒன்றே வழியாகும். நீங்கள் அதை விசுவாசிக்க தொடங்கும் போது, உங்கள் இரூதயத்தில் உங்கள் அக்கம்பக்கத்தினர், உங்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கையின் பிரச்சனைகளில் போராடும் மற்றவர்களுக்கு இதுவரை இல்லாத ஒரு மனதுருக்கம் உங்களில் உருவாவதை காண்பீர்கள்.
உங்கள் கைகளில் தீர்வு உள்ளது, மனிதனின் பிணைப்பை உடைக்கக்கூடிய, அவர்களை விடுவிக்கக்கூடிய ஆண்டவரை பற்றிய செய்தி.
கர்த்தர் நம் கையில் வைத்திருக்கும் இந்த திட்டம் எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் மனதுருக்கத்துடன் வேலை செய்யத் தொடங்கும்போது, சமூகத்தை மாற்றும் பெரும் வல்லமை வெளியிடப்படுகிறது.
ஜெபிப்போம்:
எங்கள் பிதாவே, நற்செய்தியின் மகிமைக்காக நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம். ஆண்டவரே, நீங்கள் எங்களுக்குச் செய்ததற்காக நாங்கள் முழு இருதயத்திலிருந்தும் நன்றி செலுத்தவும், அதை மற்றவர்களுக்கு வழங்குவதற்கு எங்கள் ஏக்கத்தை அதிகரியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.
Create your
podcast in
minutes
It is Free